Posts tagged ‘தமிழ்’

தலக்கோணம்’ இசைவெளியீடு


‘தலக்கோணம்’ இசைவெளியீடு

எஸ்.ஜே.எஸ். இண்டர்நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கும்படம்’தலக்கோணம்’. இந்தப்படத்தைசமுத்திரக்கனியிடம் பணியாற்றிய கே.பத்மராஜ், கதை எழுதிஇயக்கிஉள்ளார்.

புதுமுகம் ஜிதேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரியா நடித்துள்ளார். இவர்களுடன்கோட்டாசீனிவாசராவ், பெரொஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு, சண்மகசுந்தரம், நம்பிராஜ், பாலா, அபிநயாஸ்ரீ உட்பட பலர்நடித்துள்ளனர்

திகில்-சஸ்பென்ஸ் கலந்த இந்தப்படத்திற்கு சுபாஷ்-ஜவகர் இசையமைத்துள்ளர். இந்தப்படத்தின்பாடல்வெளியீட்டு விழாநேற்று சென்னையில்உள்ள அபிராமிமெகாமாலில்நடைபெற்றது. விழாவுக்கு அபிராமி ராமநாதன் தலைமை தாங்கி, முதல்பாடல் சிடியைவெளியிட்டார். நடிகை நமீதாபெற்றுக்கொண்டார்.

சின்ன படங்களுக்கு தியேட்டர்கிடைப்பதில்லை
இந்த நிலைமாற வேண்டும்.
– இயக்குநர்சுசீந்திரன்

இந்த படத்தின்இசை விழாவுக்கு இவ்வளவுபிரபலங்கள்வந்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. இப்போ, சின்ன படங்கள்இசை விழாநடத்த தியேட்டரேகிடைப்பதில்லை. விழாக்களின்பொக்கேகொடுக்கும்கலாச்சாரம்பெரிய சம்பிரதாயமாக இருக்கிறது. ஆனால்பெரும்பாலும்எல்லா பொக்கேயும்குப்பைக்குத்தான்போகின்றன. ஒரு இரண்டு நிகழ்ச்சியிலயாவது சாக்லேட்வாங்கணும்னு நான்ஆசைப்படுவேன். இந்த விழாவுல எல்லாருக்கும்துளசிசெடிகொடுத்தது ரொம்ப சந்தோசமாஇருக்கு.

பொதுவாஇப்போசின்ன படங்களை வெளியிட தியேட்டர்கள்கிடைப்பதில்லை. அதுபோல பெரிய படங்களும்இரண்டு வாரங்களுக்கு மேல்தியேட்டரில்இருப்பதுமில்லை. இந்த நிலை மாறவேண்டும். நான்வெண்ணிலாகபடிகுழு எடுக்கும் போது அது சின்ன படம்தான். நிறைய பிரச்சினைகளுக்கு அப்புறம்தான்அது வெளிவந்தது. இந்த விழாஇசைவெளியீடு விழாநடப்பது சந்தோசமாஇருக்கு. ஏன்னா, ஒரு படத்தோட வெற்றிக்கு பின்னாடி நிறைய பேரோட வாழ்க்கைஅடங்கியிருக்கு. இந்த இசை விழாஎன்பது இந்த படக்குழுவுக்கு நம்பிக்கைவெளிச்சம். இந்த நம்பிக்கைவெற்றிபெற வாழ்த்துகிறேன்.

முல்லைபெரியார்அணைக்காக
தமிழ்திரையுலகம்போராட வேண்டும்.
– இயக்குநர்சுப்பிரமணியம் சிவா

இந்த இடத்துல நான்அரசியல் பேசுறதா நெனைக்காதீங்க. நான்முன்னாடிசபரிமலைக்கு மாலைபோடுறது உண்டு. ஆனாகேரள போலீஸ்காரங்க பண்ண அட்டூழியத்தில மாலைபோடுறதையேவிட்டுட்டேன். சாமிகும்பிட போறவங்களைசாமிகும்பிட விட மாட்டேங்கிறாங்கன்னாஅவங்க எப்டிஇருக்காங்கன்னு பாருங்க. நம்ம தான்கடவுள்.

சிகாகோவில் விவேகானந்தர் பேசிய போது, இந்திய மக்களுக்கு தேவைசாப்பாடும் கல்வியும்தான். மதம்இல்ல. ஏன்மதத்தைபரப்புறீங்கன்னு கேட்டாரு. அதுக்கு அவங்க அபாரமாகைதட்டுனாங்க. மதம்என்பது முக்கியம்அல்ல. மனுசனாஇருக்கிறது தான்முக்கியம். மனுசங்களாநடந்துக்காதவங்களைஎதிர்த்து நாமளும்போராடணும்.

இங்க, தேனப்பன்சார்இருக்காரு. அபிராமிராமனாதன் சார் இருக்காரு. இவங்க எல்லாம்அந்த வேலையைமுன்னின்று செய்யணும். எங்க அண்ணன்அமீர்இங்க இல்ல. அதனால நான்பேசுறேன். அண்ணன்சமுத்திரக்கனி, சசிகுமார்எல்லாம்கூட்டிட்டு வரவேண்டியது என்பொறுப்பு. இந்தப் படம்வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

எம்.எஸ்.பாஸ்கரின்கலக்கல்கவிதை

இந்தப்படத்தோட நாயகனைபார்க்கும்போது புது நடிகர்மாதிரிதெரியல. நடிப்பு, நடனம்எல்லாத்துலயும்கலக்குறாரு. எனக்கு டான்ஸ்ஆடவேவராது. அதையும்மீறிரெண்டு மூணு படங்கள்ல நான்நடனம்ஆடியிருக்கேன். என்னால இண்டஸ்ட்ரிய விட்டு ஓடுன டான்ஸ்மாஸ்டர்லாம்கூட இருக்காங்க. அப்படிப்பட்ட சூழ்நிலையில்அறிமுக நாயகன்ஜிதேஷ்இவ்ளோஅழகாடான்ஸ் ஆடியிருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களைவும்வாழ்த்துக்களையும்தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்குள்ள ஒரு படைப்பபாளிஇருக்கான். அவன்அப்பப்ப முழிச்சிக்குவான். ஒரு தடவைஎனக்கு முதுகுல ஒரு கட்டிவந்திருந்தது. அப்போநான்ஒரு கவிதை எழுதுனேன்.

கட்டியால
வந்த வலி
கட்டிஒடைஞ்சா
தீரும்.

கட்டுனவளால
வந்தவலி
கட்டையில போனாத்தான்
தீரும்

இந்தப்படம்வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

வெற்றிப்படங்களின்ரகசியம்
– நமீதா

சின்ன படம்பெரிய படம்எல்லாத்துக்கும்பின்னாடி ஒரு வெற்றி ரகசியம்இருக்கு. அது ரசிகர்களாகிய நீங்கள்தான். எனவே, இந்தப்படத்தையும் நீங்க வாழ்த்திவெற்றிபெற வைக்கணும்னு கேட்டுக்கிறேன். இந்தப்படத்தைகண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க. இந்தப்படம்பெரிய வெற்றிபெற இந்தப்படக்குழுவைநான்வாழ்த்துகிறேன்.

சின்ன படங்கள்இல்லைஎன்றால்தியேட்டர்களை
இழுத்து மூட வேண்டியது தான்.
– அபிராமிராமனாதன்

எல்லாருக்கு பின்னாடியும்ஒரு மதம் இருக்கு. இன்னைக்கு எனக்கு பின்னாடியும்ஒரு மதம்இருக்கு. அந்த மதம்தாமதம். இந்தப்படத்தோட பாடல்களைநான்பார்க்க முடியல. ஆனா, இந்த படத்துக்கும்எனக்கும் ஒரு சம்பந்தம்இருக்கு.

நானும்ஒரு படம்எடுத்துருக்கேன். படம்எடுக்கும்போது என்னல்லாம்தப்புபண்ணக்கூடாதுன்னு அந்தப்படத்துல நான் நெறையவேகத்துக்கிட்டேன். அந்தப்படத்தை நாங்க தலக்கோணத்துல தான்எடுத்தோம். அங்க நாங்க அடிச்ச கூத்துல, கொஞ்ச நாளைக்கு தலக்கோணம்பக்கம்யாரையும்விடல. ரொம்ப நாள்கழிச்சிஇந்தப்படத்தைஅங்க எடுத்துருக்காங்க. பழசை எல்லாம்மறந்துட்டாங்கன்னு நெனைக்கும்போது ரொம்ப சந்தோசமாஇருக்கு.

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறதில்லன்னு ஒரு குற்றச்சாட்டை இங்க வச்சாங்க. சின்ன படங்கள்இல்லன்னாதியேட்டர்களைஎல்லாம்இழுத்து மூட வேண்டிய தான். ஏன்னா, வருசத்துல 52 வாரமும்பெரிய படங்களைவச்சிஓட்ட முடியாது. சின்ன படங்கள்தியேட்டர்கள் தொடர்ந்து படம் ஓட்டுறதுக்கு சப்போர்ட்பண்ணுது. ஆனா, சின்ன படக்காரங்க எல்லாம்நாங்க பெஸ்டிவல் டைம்ல தான்வெளியிடுவோம்னு சொன்னாரொம்ப கஷ்டம். நீங்க வியாபாரிகள்னாநாங்களும்வியாபாரிகள்தான், அந்த டைம்ல நாங்க பெரிய படங்களுக்குத்தான்முன்னுரிமைகொடுக்க முடியும்.

1987ல்ஒரு வாரத்துக்கு ரெண்டு படம்தான்வெளியிட முடியும்கிற நெலைமைஇருந்துச்சி. அதேமாதிரிசென்சார் வாங்கி15 நாளைக்கு முன்னாடி ரிலீஸ்தேதிஅறிவிக்கணும்ங்கிறது கட்டாயமாஇருந்துச்சி. அதை நம்ம சங்கங்கள்எல்லாம்சேர்ந்து மறுபடிகொண்டு வரணும். ஒரு வாரத்துக்கு ஒரு பெரிய படம், ஒரு சின்ன படம்மட்டும்தான் வெளியிட முடியும்ங்கிற நிலைஇருந்தாநிலைமைசீராகும்னு நம்புறேன்.

விழாவில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்சங்க செயலாளர்பி.எல். தேனப்பன், இயக்குநர்பேரரசு, பரதன், நடிகர் கஞ்சாகருப்பு உட்பட பலர்கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த அனைவரையும்துளசிசெடிகொடுத்து வரவேற்றார்தயாரிப்பாளர்திருமலை சிவம். முடிவில் இயக்குனர்பத்மராஜ்நன்றிகூறினார்.

– ஜி.பாலன்
செய்திதொடர்பாளர்

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைப்படசுருள் நிருபர்

மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’யில் நாகேஸ்வரராவ் – பிரகாஷ் ராஜ்!

மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’யில் நாகேஸ்வரராவ் – பிரகாஷ் ராஜ்!

மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.

இவரைத் தவிர, முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

யுடிவி தயாரிப்பில், ஜீவா – பூஜா ஹெக்டே நடிக்கும் முகமூடி படத்தில் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார் நரேன்.

இப்போது இந்தப் படத்தில் தெலுங்கின் சாதனை நடிகர் நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

நாகேஸ்வரராவ் தவிர, முன்னணி கலைஞர் பிரகாஷ் ராஜ் மிக முக்கிய வேடத்தில் வருகிறார்.

கே இசையமைக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 30ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்குகிறது.
மக்கள் தொடர்பு: குணசீலன்

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைபடசுருள் நிருபர்